இளம்பெண் மீது மோதிய கார் - பதறவைக்கும் வீடியோ

21970பார்த்தது
ஈரோடு சென்னிமலை அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண் மீது அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதியது. இதில் சில அடி தூரம் வரை அவர் இழுத்துச் செல்லப்பட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் காயமடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த மாதம் 27ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வைரலாகி வருகிறது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி