கர்நாடகா: மைசூரு மாவட்டம் ஹரோஹள்ளி அருகே உள்ள ஜெயபுரா ஹோப்ளி பகுதியில் பட்டப்பகலில் காரை வழிமறித்து நடந்த கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 காரில் முகமூடி அணிந்து வந்த கொள்ளை கும்பல்,கொள்ளைக்குழு, கேரளாவை சேர்ந்த தொழிலதிபரின் இன்னோவா காரை மறித்து கொள்ளையில் ஈடுபட்டனர். அவரிடம் இருந்து பணத்தைக் கைப்பற்றியதுடன் காரையும் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இக்கொள்ளை சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.