தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நேற்று (மே 17) கார் கவிழந்து விபத்துக்குள்ளானது. இதில், குழந்தை உள்பட 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் நகைகள் கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, 50 அடி ஆழ கிணற்றில் இருந்த தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு, உள்ளே இருந்த 20 சவரன் நகைகள் மீட்கப்பட்டன. தொடர்ந்து, இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.