கோயம்புத்தூர் மாவட்டம் அருகே சாலையில் சென்ற கார் ஒன்று தடுப்புச் சுவற்றில் மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்தனர். காந்திபுரம் பகுதியில் இரவு நேரத்தில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்களை மீட்ட அருகில் இருந்தவர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.