நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார் (வீடியோ)

75பார்த்தது
கர்நாடகாவில் நடுரோட்டில் ஒரு கார் தீப்பிடித்து எரிந்தது. பெலகாவி மாவட்டத்தில் உள்ள கானாபூர் செல்லும் வழியில் ஷாஹாபூர் அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் தீயைக் கட்டுப்படுத்தினர். காரில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். காரில் தீ விபத்து ஏற்பட்டதற்கான விவரம் வெளிவரவில்லை.

தொடர்புடைய செய்தி