தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சாலையில் சென்ற காரில் திடீரென தீ பற்றி எரிந்த சம்பவம் வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதாபூரில் இருந்து ஜூபிலி ஹில்ஸ் நோக்கிச் சென்ற கார், துர்கம் செருவு கேபிள் பாலத்தில் சென்றபோது தீடீரென தீ பிடித்தது. உடனடியாக காரில் இருந்தவர்கள் இறங்கிய நிலையில் உயிர் பிழைத்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.