கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவாளர்களுக்காக வழங்கப்படும் பியர் ஆசிங்யு (Pierre Angénieux Tribute) விருது வழங்குவதற்காக சந்தோஷ் சிவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. உலகின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது, 2024 ஆம் ஆண்டிற்காக சந்தோஷ் சிவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையிலும் உலகளவில் புகழ்பெற்ற 10 பேர் இவ்விருதினைப் பெற்றுள்ளனர். கேரளாவை பூர்வீகமாக கொண்ட சந்தோஷ் சிவன் மணிரத்னம் படங்களிலும் பல இந்திய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.