அமெரிக்காவைச் சேர்ந்த இல்லினாய்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ErSO-TFPy என்று பெயரிடப்பட்ட மூலக்கூறு ஒன்றை கண்டறிந்துள்ளனர். இதை வைத்து எலிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் ஒரே ஒரு டோஸ் செலுத்தியதன் மூலம் மார்பக புற்றுநோய் கட்டி அகற்றம் தூண்டப்படுவது தெரியவந்துள்ளது. இந்த செயற்கை மூலக்கூறின் ஒரே டோஸ் மூலம் மார்பகத்தில் ஏற்படும் சிறிய கட்டிகளை அகற்றவும், பெரிய கட்டிகளை கணிசமாக குறைக்கவும் முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.