நாம் பெரும்பாலான பழங்களை ஃப்ரிட்ஜில் வைத்தே சாப்பிடுகிறோம். ஆனால், வாழைப்பழத்தை நாம் ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடக்கூடாது. ஏனென்றால், ஃப்ரிட்ஜில் வைத்து வாழைப்பழத்தை சாப்பிட்டால் அதில் உள்ள மாவுச்சத்து ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் (resistant starch) ஆக மாறிவிடும். இதனை நாம் சாப்பிடும் போது, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரித்து, சர்க்கரை நோய் வருவதற்கு காரணமாக அமைந்துவிடும். வாழைப்பழத்தை காலை, மாலை, அல்லது இரவு என எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.