பெரும்பாலான கடைகளில் உணவுகள் கருப்பு பிளாஸ்டிக் பாக்ஸ்களில் வைத்து விநியோகம் செய்யப்படுகிறது. இந்த பிளாஸ்டிக்குகள் பெரும்பாலும் பழைய எலக்ட்ரானிக்ஸ் உட்பட மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. சமீபத்திய ஆய்வில் கருப்பு பிளாஸ்டிக் பொருட்களில் 85% நச்சுப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இது புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடையது. இந்த பிளாஸ்டிக்கில் சூடான உணவுப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.