மனித மூளை ஒவ்வொரு நாளும் 400 முதல் 500 கலோரிகளை எரிக்கின்றன. நமது சிந்தனை, ஆற்றல், கனவு, உடல் செயல்பாடு, உடல்நல பராமரிப்பு உட்பட அனைத்து விஷயத்துக்கும் உத்தரவுகளை கொடுக்கவும், அதனை செயல்படுத்தவும் மூளை கலோரிகளை செலவழிகிறது. ஒருநாளில் நமது உடலுக்கு கிடைக்கும் ஒட்டுமொத்த ஆற்றலில் மூளை மட்டும் 20 முதல் 25% ஐ செலவளிக்கிறது. நாம் உறங்கும் நேரத்தை தவிர பிற நேரத்தில் மூளை சுறுசுறுப்புடன் செயல்பட்டு உடல் செயல்பாடுகளை நிர்வகிக்கிறது.