விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஜூலை 8ம் தேதி செயற்குழு கூட்டம் நடக்கிறது. பாமக நிர்வாகிகளுக்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ராமதாஸ் - அன்புமணி இடையே நடக்கும் தலைமை யுத்தம் காரணமாக, அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? என பாமகவின் கௌரவத்தலைவர் ஜி.கே. மணியிடம் கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், "அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்படும். அவரின் வருகை தெரியவில்லை" என கூறினார். இது கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.