திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு வெளி மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது முட்டைகோஸ் வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. 15 கிலோ எடை கொண்ட புடலங்காய் கட்டு ரூ.250, சுரைக்காய் கட்டு ரூ.150 முதல் ரூ.300, 15 கிலோ வெண்டைக்காய் மூட்டை ரூ.500, மிளகாய் மூட்டை ரூ.400 முதல் ரூ.500, 30 கிலோ பூசணிக்காய் மூட்டை ரூ.200, 40 கிலோ எடை கொண்ட முட்டைகோஸ் ரூ.250, 15 எண்ணம் கொண்ட காலிபிளவர் மூட்டை ரூ.200 ஆகிய விலைகளில் விற்பனையாகிறது.