ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வேட்பாளர் இறுதிப்பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிட மொத்தம் 55 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்த நிலையில், 8 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். இதைத்தொடர்ந்து, திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 47 பேர் இடைத்தேர்தலில் களம் காண உள்ளனர். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பிப்.05-ம் தேதி நடைபெற உள்ளது.