மகாராஷ்டிராவில் இந்தி பேசுபவர்களை நவநிர்மாண் சேனா கட்சி தொண்டர்கள் தாக்கி வருகின்றனர். இந்நிலையில், தொழிலதிபர் சுஷில் கெடியா என்பவர் தனது X தளத்தில், "30 ஆண்டாக மகாராஷ்டிராவில் வசிக்கிறேன். எனக்கு மராத்தி தெரியாது. கற்றுக் கொள்ளவும் மாட்டேன்" என்று ராஜ் தாக்கரேவை குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தார். இதனால் அவரின் கெடியோனோமிக்ஸ் அலுவலகத்தை நவநிர்மான் சேனா தொண்டர்கள் சூறையாடினர். இது குறித்த வீடியோ இணையத்தளத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.