சொத்தை அபகரிக்க தொழிலதிபர் கடத்தல்: இருவருக்கு ஜாமீன் மறுப்பு

52பார்த்தது
சொத்தை அபகரிக்க தொழிலதிபர் கடத்தல்: இருவருக்கு ஜாமீன் மறுப்பு
மதுரையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் டி.சுந்தரம் கடந்த ஆகஸ்ட் மாதம் கடத்தப்பட்ட நிலையில் பின்னர் மீட்கப்பட்டார். பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரிப்பதற்காக சுந்தரம் கடத்தப்பட்டது தெரியவந்தது. வழக்கு தொடர்பாக 8 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளிகளான மரியராஜ் மற்றும் ஜனநேந்திரன் ஜாமீன் கோரிய நிலையில், ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி