அசதியில் தூங்கிய பேருந்து ஓட்டுநர்.. செருப்பால் அடித்த அதிகாரி

56பார்த்தது
மதுரை மாவட்டம் ஆரப்பாளையத்தில் பணிச்சுமை காரணமாக அசதியில் தூங்கிய அரசுப் பேருந்து ஓட்டுநரை, போக்குவரத்து துறை அதிகாரி செருப்பால் அடித்துள்ளார். கணேசன் என்ற ஓட்டுநர், தாராபுரத்தில் இருந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது ஆரப்பாளையம் வந்த அவர், பேருந்தின் முகப்பு விளக்கை அணைத்துவிட்டு, ஓய்வெடுத்துள்ளார். இதுகுறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் பயணிகள் புகார் அளித்தனர். உடனடியாக ஓட்டுநரை அழைத்த அதிகாரி, செருப்பால் அடித்து தாக்கியுள்ளார்.

நன்றி: TamilJanamNews

தொடர்புடைய செய்தி