தெலங்கானா: சூர்யபேட் - கம்மம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது பேருந்து மோதியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் இருந்து கூலி வேலைக்காக தொழிலாளிகளை ஏற்றிவந்த லாரி சாலையின் ஓரம் நின்றுக்கொண்டிருந்தது. அப்போது, அதிவேகமாக வந்த தனியார் பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில், 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 17 தொழிலாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.