நைஜீரியாவில் பேருந்து விபத்து.. 21 இளம் விளையாட்டு வீரர்கள் பலி

83பார்த்தது
நைஜீரியாவில் நேற்று (மே 31) நடந்த பேருந்து விபத்தில் 21 இளம் விளையாட்டு வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நைஜீரியாவின் ஓகுன் மாநிலம் நடத்திய 22ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுவிட்டு வடக்கு நைஜீரியாவில் உள்ள கானோவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது இந்த விபத்து நிகழ்ந்தது. "இது ஒரு தேசிய சோகம்" என்று நைஜீரிய விளையாட்டு அமைச்சகம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி