உத்தரப் பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டம் சர்தார் கொட்வாலி பகுதியை சேர்ந்தவர் சுசில் பாஜ்பாய் (42). இவர் நேற்று தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றுவிட்டு உறவுக்கார இளைஞர் சுபம் உடன் தெருவில் நடத்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த தெருவில் சுற்றித்திரிந்த காளை கொம்பால் சுசிலை முட்டியதில் சுசில் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், சுபத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.