பஞ்சாப்: மொகாலி மாவட்டம் சோஹானா கிராமத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இளம்பெண் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (டிச.21) மாலை கட்டிடத்தின் அருகே கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, 4 மாடி கட்டிடம் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்தது. இதைத்தொடர்ந்து, 17 மணி நேர மீட்புப்பணிக்கு பிறகு ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த இளம்பெண் உட்பட 2 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில், 15-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.