உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜில் உள்ள ரயில் நிலையத்திற்கு அருகில் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ஒரு கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. இந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி விழுந்ததில் சுமார் 36 தொழிலாளர்கள் புதைந்து போனதாகக் கூறப்படுகிறது. இதுவரை 6 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மற்ற தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.