மகாராஷ்டிரா: நாக்பூரை சேர்ந்த அக்ஷய் என்பவர் ரூ.300 மதிப்புள்ள டி-சர்ட்டை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அந்த டி-சர்ட் தனக்கு பொருந்தவில்லை என கூறி தனது நண்பன் சுபமிடம் அக்ஷய் விற்க முயன்றுள்ளார். இதில் அக்ஷயின் அண்ணனும் தலையிட்டு சுபம் உடன் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் டி-சர்ட்டுக்கான ரூ.300 பணத்தை அக்ஷய் மீது சுபம் தூக்கி வீசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அக்ஷய் மற்றும் அவரது அண்ணன் இருவரும் சேர்ந்து சுபம் உடைய கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.