திருமண தகவல் விளம்பரத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை என்ற விளம்பரம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த, வசதி படைத்த மணமகனுக்கு அதே இனத்தைச் சேர்ந்த மணப்பெண் தேவை என விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், அந்த மணப்பெண் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவராக இருக்க வேண்டும் என்பதே முக்கிய நிபந்தனையாக குறிப்பிடப்பட்டுள்ளது.