பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளும் நிறைவடைந்து குங்குமம் வைக்கும்போது மணமகனுக்கு கைநடுங்கியதால் திருமணத்தை மணப்பெண் நிறுத்தியுள்ளார். மேலும், மாப்பிள்ளைக்கு குறை இருப்பதாகவும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரது கை நடுங்குகிறது எனவும் மணப்பெண் குற்றச்சாட்டு கூறியுள்ளார். இந்நிலையில், இருவீட்டாரையும் அழைத்து போலீசார் சமாதானம் செய்ய முயன்றும் தீர்வு எட்டப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.