தடை அதை உடை.. புது சரித்திரம் படை!

61பார்த்தது
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கால் வீக்கத்துடன் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தென்கொரியாவின் குமி நகரில் 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மே.31 நடைபெற்ற 400 மீ தடைதாண்டும் போட்டியில், வித்யா 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். கால் வீக்கத்துடன் ஓடிய அவர் பந்தய தூரத்தை 56.46 வினாடிகளில் கடந்து அசத்தினார்.

தொடர்புடைய செய்தி