உத்திரப் பிரதேச மாநிலத்தின் காசியாபாத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு 19 வயது இளைஞருடன் நட்பு ஏற்பட்டு ஒருகட்டத்தில் அவருடன் பழகுவதை நிறுத்தினார். அந்த இளைஞர் மூன்று சிறுவர்களுடன் சேர்ந்து கடந்த அக். 7-ல் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்திருக்கிறார். பாதிக்கப்பட்ட சிறுமி மூலம் கடந்த அக். 11-ல் தான் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அதன்பேரில் மூவரை கைது செய்த போலீசார் இன்னொருவரை தேடுகின்றனர்.