பன்றி வேட்டைக்காக மின் பொறி.. சிறுவன் மின்சாரம் தாக்கி பலி

50பார்த்தது
பன்றி வேட்டைக்காக மின் பொறி.. சிறுவன் மின்சாரம் தாக்கி பலி
கேரளா: மலப்புரத்தில் காட்டுப்பன்றிக்காக வைத்த மின் பொறியில் சிக்கிய 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் இறைச்சிக்காக சட்டவிரோதமாக மின்சாரம் பாய்ச்சி பொறி வைத்த வினேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் வன விலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சியை விற்பனை செய்து வந்துள்ளார். உயிரிழந்த சிறுவன் ஆனந்துவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மஞ்சேரி மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளது. குற்றவாளி வினேஷை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி