இரவு உணவு சாப்பிட்டதும் தூங்க சென்ற சிறுவன் பலி

59பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில், வீட்டில் இரவு உணவு சாப்பிட்ட சிறுவன் உயிரிழந்துள்ளார். உணவு சாப்பிட்டதும் உறங்கச் சென்ற சிறுவனுக்கு திடீரென வயிற்றுப்போக்கு, தலைவலி, வாந்தி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்டு பெற்றோர், பெரியபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். சிறுவன் இறப்புக்கு உணவு தான் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி