நீலகிரிக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் ஊட்டியில் மரம் முறிந்து விழுந்ததில் கேரளாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து சிறுவனின் தாய் நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறி அழுதது காண்போர் கண்களை குளமாக்கியது. அவருக்கு அமைச்சர் சுவாமிநாதன் ஆறுதல் கூறினார்.மக்களுக்கு ஏற்கனவே அனைத்து வகையிலும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.