திருச்சி: மணப்பாறை அயன்பெருவையில், பெருமாள் என்பவரின் ஒன்றரை வயது குழந்தை சர்வின் வீட்டிலிருந்து வெளியே சென்றபோது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். இதை கவனித்த அவரது மனைவி சுதா உறவினர்களுடன் அவர்களை பின்தொடர்ந்து, சுடுகாடு அருகே குழந்தையை மீட்டனர். குழந்தையின் கழுத்தில் சிறு காயங்கள் இருந்ததுடன், அணிந்திருந்த தங்க தாயத்து திருடப்பட்டிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் உட்பட இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.