அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் ஃபோர்மேன் (76) காலமானார். 2 முறை உலக ஹெவிவெயிட் சாம்பியனாக இருந்துள்ள இவர், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கமும் வென்றுள்ளார். இவர் நேற்று (மார்ச் 21) உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இருந்தபோதிலும் அவரது இறப்புக்கான காரணம் குறித்த தகவலை வெளியிடவில்லை. ஜார்ஜ் ஃபோர்மேன் இறப்புக்கு அவரது ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.