கருப்பு உளுந்தை தோலுடன் ஊற வைத்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதே பங்கு பச்சரிசியை ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் நன்றாக கலந்து உப்பு, தேங்காய் துருவல், சுக்குத்தூள் ஆகியவற்றை சேர்த்து வட்டமாக வடை போல் தட்டி கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து எடுத்தால் சுவையான கொழுக்கட்டை ரெடி. உளுந்து உடலுக்கு குளிர்ச்சி தரும். விலா எலும்பு, முதுகு எலும்புகளுக்கு நல்லது.