சென்னை வடபழனியில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. நேற்று (டிச. 29) நள்ளிரவு 12:15 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பில், முருகன் கோயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர்கள் கூறியதால் பரபரப்பு தொற்றி கொண்டது. இந்த நிலையில் இரவு முழுவதும் காத்திருந்து இன்று (டிச. 30) கோயில் நடை திறந்த பின்னர் சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.