பாலிவுட் நடிகை நிகிதா தத்தா மற்றும் அவரது தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நடிகை வெளியிட்ட பதிவில், “கொரோனா தொற்று எனது அம்மாவுக்கும் எனக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அழைக்கப்படாத விருந்தினர் நீண்ட காலம் தங்காமல் போகலாம். இந்த சிறிய தனிமைப்படுத்தலுக்குப் பிறகு சந்திப்போம். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்" என ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.