சைஃப் அலி கானுக்கு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அவரது பட்டோடி குடும்பத்தின் மூதாதையர் சொத்து மதிப்பு சுமார் ரூ.15,000 கோடி உள்ளது. இதனை பறிமுதல் செய்ய விதிக்கப்பட்ட தடை உத்தரவை மத்தியப் பிரதேச நீதிமன்றம் நீக்கியதால், இந்தச் சொத்தை மத்திய அரசு இப்போது பறிமுதல் செய்யலாம். இந்த உத்தரவு நீக்கப்பட்டதன் மூலம், எதிரி சொத்து சட்டம், 1968ன் கீழ், மத்திய அரசு இந்த சொத்தை பறிமுதல் செய்யும் என்று கூறப்படுகிறது.