பெங்களூருவில் உயிரிழந்த தமிழ் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு வந்தது

56பார்த்தது
RCB அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துவந்த திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த காமாட்சி (28) என்ற இளம்பெண்ணும் இறந்தார். இதனிடையே அவரது உடல் இன்று பிற்பகல் சொந்த ஊரான மைவாடி பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது அவரது உடலைப் பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

தொடர்புடைய செய்தி