ஓசூர் - கர்நாடகா எல்லையில் உள்ள 5 பட்டாசு கடைகளில் வெடி விபத்து ஏற்பட்டதில், 10 பேர் உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி ஓசூர் அருகே தமிழக கர்நாடக எல்லை பகுதியான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடைகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து அருகில் இருந்து மதுபான கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கும் பரவியதால் தீயானது மளமளவென கொழுந்து விட்டு எரிய துவங்கியது. உடனடியாக, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து நான்கு வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்து வருகின்றனர். மேலும் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.