இணையத்தில் கிடைக்கும் மருத்துவக் குறிப்புகளை மக்கள் கண்மூடித்தனமாக நம்புகின்றனர். இதனால் ஏற்படும் பக்க விளைவுகளை உணராமல் மருந்துகளை எடுத்துக் கூடாது. அதில் முக்கியமான ஒன்று கருஞ்சீரகம். குறிப்பாக குழந்தைகளுக்கு தினமும் கருஞ்சீரகத்தை கொடுத்தால் உடலில் சூடு ஏற்பட்டு அரிப்பு உருவாகும் அபாயம் உள்ளது. மருத்துவ குணம் நிறைந்தது என்றாலும் அளவுக்கு அதிகமாகவோ, மருத்துவரின் ஆலோசனையின்றியோ எடுத்துக் கொள்ளக் கூடாது என சித்த மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.