சென்னை பட்டினப்பாக்கத்தில் நடுரோட்டில் இளைஞரை துரத்தி தாக்குதல் நடத்திய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார். காரில் வழி விடுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர் மணிவண்ணன் என்பவரை திருவொற்றியூர் பாஜக நிர்வாகி கார்த்திக் ராஜா, ஆயுதப்படை காவலர் கோபிநாத், சுடலையாண்டி ஆகியோர் நடுரோட்டில் விரட்டி சரமாரியாக தாக்கினர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, இளைஞரை தாக்கிய பாஜக நிர்வாகி உள்பட மூவரையும் கைது செய்தனர்.