மகாராஷ்டிராவில் சிவசேனாவை இரண்டாக உடைத்தது போல் பாமகவை உடைக்க பாஜக முயல்வதாக கே. செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். ராமதாஸை சந்தித்த பிறகு திமுக கூட்டணியில் பாமகவை சேர்க்க செல்வப்பெருந்தகை முயல்வதாக கருத்து எழுந்தது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் - விசிக இரண்டாம் கட்டத் தலைவர்கள் X தளத்தில் கருத்து மோதலில் ஈடுபட்டனர். இந்நிலையில், மீண்டும் பாமகவுக்கு ஆதரவான பேச்சு பேசுபொருளாகியுள்ளது.