2024 மக்களவை தேர்தலில் பாஜக ₹1,494 கோடி செலவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இது மொத்த கட்சிகளின் தேர்தல் செலவில் 44.56% ஆகும். ADR அறிக்கையின்படி, காங்கிரஸ் கட்சி ₹620 கோடி (18.5%) செலவு செய்துள்ளது. நன்கொடை வசூலைப் பொருத்தவரை, தேசிய கட்சிகள் மட்டும் ₹6,930 கோடி, மாநிலக் கட்சிகள் ₹515 கோடி வசூலித்துள்ளன. தேர்தலின்போது விளம்பரத்திற்காக மட்டும் அரசியல் கட்சிகள் ₹2,008 கோடியை செலவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.