பாரதிய ஜனதா கட்சி இளைஞர் பிரிவின் தேசிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலையின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, தமிழக பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார். இச்சூழலில், பாஜக யுவமோர்ச்சா பிரிவு (BJYM) தலைவராக தற்போது கர்நாடக எம்பி தேஜஸ்வி சூர்யா இருந்து வரும் நிலையில், அண்ணாமலைக்கு அந்த பதவி அளிக்கப்படலாம் என கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.