பீகார் தலைநகர் பாட்னாவில் பாஜக தலைவரும், தொழிலதிபருமான கோபால் கெம்கரை மர்ம நபர்கள் சுட்டுக் கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காந்தி மைதான காவல் நிலையப் பகுதியில் உள்ள 'பனாச்' ஹோட்டல் அருகே நேற்று (ஜூலை 4) பாஜக தலைவர் கோபால் கெம்கர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கிருந்து ஒரு தோட்டாவை கைப்பற்றியுள்ளனர். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.