பட்டணாவில் பாஜக தலைவர் கோபால் கேம்கா சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிசிடிவி காட்சிகள் முக்கிய தடயமாக போலீசாருக்கு கிடைத்துள்ளது. ‘பனாச்’ ஹோட்டல் அருகே உள்ள கேமராவில், வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் கோபாலை சுட்டுவிட்டு தப்பி ஓடும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதையடுத்து, தப்பியோடிய நபரின் அடையாளங்களை வைத்து போலீசார் தீவீர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், விரிவான விசாரணைக்கு சிறப்பு குழு (SIT) ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.