பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை - பகீர் தகவல்

8பார்த்தது
பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை - பகீர் தகவல்
திண்டுக்கலில் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜக்காபட்டியை சேர்ந்தவர்கள் சுப்பிரமணியின் மகன்களான விஜயகுமார், கணேஷ்குமார். இவர்கள் இருவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதில் விஜயகுமாருக்கு ஆதரவாக அவரது நண்பர் பாலகிருஷ்ணன், சொத்தை பிரித்து தருமாறு கணேஷ்குமாரிடம் கூறிவந்துள்ளார். இதனால் பாலகிருஷ்ணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கணேஷ்குமார் உட்பட இருவர் கைதான நிலையில், மேலும் இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

தொடர்புடைய செய்தி