பாஜக தேசியத் தலைவராக மகாராஷ்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சித் தலைமை ஏற்கனவே ஒரு முடிவை எடுத்துள்ளதாக தேசிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இன்னும் சில வாரங்களில் ஃபட்னாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்வார். நிதி ஆயோக் கூட்டம் முடிந்தவுடன், அனைத்து மாநில பாஜக தலைவர்களையும் மோடி சந்தித்து பேசினார். இந்த நிலையில் ஃபட்னாவிஸுடன் சிறப்பு சந்திப்பு நடந்ததாக தெரிகிறது.