விசிக தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டியில், "தென் மாவட்டங்களை குறிவைத்து பாஜக அரசியல் செய்கிறது. வடக்கில் ராமர், கிருஷ்ணரின் பெயரை வைத்து மதவாத அரசியலில் மக்களை பலிகொடுப்பதை போல தமிழ்நாட்டில் முருகனின் பெயரால் செய்யப்படும் மதவாத அரசியல் எடுபடாது. அதற்கு தமிழ்நாட்டு மக்களும் ஏமாற மாட்டார்கள். கடவுள் முருகனும் ஏமாற மாட்டார். பாஜகவின் ஜம்பம் இங்கு பலிக்காது" என கூறினார்.