கோவையில் பேரூர் படித்துறையில் காவல் உதவி ஆய்வாளர் எனக்கூறி பெட்டிக்கடை உரிமையாளரிடம் ரூ.15,000 பணம் பறித்த பாஜக நிர்வாகி பெருமாள் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெருமாள், போத்தனூர் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது சீட்டாட்டத்தில் ஈடுபட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டவர். தற்போது பாஜக கோவை மாநகர் மாவட்டம் முன்னாள் ராணுவ பிரிவு துணைத் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.