திருநெல்வேலியில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது மதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “திமுக கூட்டணியில் உள்ள எந்த கட்சியுடன் பேச்சுவார்த்தை என்பதை இப்போது கூற முடியாது. திமுக கூட்டணியில் உள்ள கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறோமா என்பதை இப்போது கூற முடியாது” என்றார்.